Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Princiya Dixci / 2021 பெப்ரவரி 23 , பி.ப. 09:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருத்துவ வல்லுநர் ஒருவருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து, வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பதில் பணிப்பாளர் வைத்தியர் சண்முகநாதன் சிறிபவானந்தராஜா தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், நேற்று (22) முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த மருத்துவ வல்லுநருக்கு
கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டதாகத் தெரிவித்தார்.
இது தொடர்பில் எவரும் அச்சமடையத் தேவையில்லையெனத் தெரிவித்த அவர், வைத்தியசாலையில் உரிய சுகாதார நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன என்றும் கூறினார்.
பாதிக்கப்பட்ட மருத்துவ வல்லுநர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பிலுள்ள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் எனவும், அவர் தெரிவித்தார்.
மேலும், அன்டிஜன் பரிசோதனையின் மூலம் தாதி ஒருவருக்கும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டதாகத் தெரிவித்த அவர், அவர்களது மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு அனுப்ப்ப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
"வைத்தியசாலையின் செயற்பாடுகள் அனைத்தும் சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக எந்தவிதமான இடையூறுகளும் இன்றி நடைபெறுகின்றன. அவற்றை தொடர்ந்து கண்காணிப்பதற்கு சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது" எனவும், சண்முகநாதன் சிறிபவானந்தராஜா தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago