Editorial / 2024 மே 21 , மு.ப. 10:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம் அளவெட்டிப் பகுதியில், திங்கட்கிழமை (20) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அளவெட்டி பகுதியை சேர்ந்த 36 வயதான வீரசிங்கம் தயானந்தன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
அளவெட்டி வடக்கு செட்டிச்சோலைப் பகுதியில், வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பபழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்லிப்பழை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
31 minute ago
11 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
11 Jan 2026