Janu / 2024 மார்ச் 07 , பி.ப. 01:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
பருத்தித்துறை வீதியூடாக யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த லொறியொன்று நல்லூர் ஆலயத்துக்கு முன்பாக உள்ள வளைவில் திரும்பும் போது அருகிலிருந்த கடையொன்றில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் வியாழக்கிழமை (07) பதிவாகியுள்ளது .
இவ் விபத்தில் லொறியின் சாரதி காயங்களுக்குள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன் போது தனியார் தொலைக்காட்சி நிறுவனமொன்று கடுமையாக சேதமடைந்துள்ளதுடன் அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியொன்றும் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
மேலும் இச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .
நிதர்ஷன் வினோத்


2 hours ago
05 Nov 2025
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
05 Nov 2025
05 Nov 2025