Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Editorial / 2019 செப்டெம்பர் 04 , பி.ப. 03:18 - 1 - {{hitsCtrl.values.hits}}
-எம். றொசாந்த்
வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் வழிநடத்தலில், வடக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் அமைச்சுடன் ஆளுநர் செயலகம் இணைந்து நடத்தும் வடக்கின் குரலிசை - 2019 தேர்வு நடைபெறவுள்ளது.
இந்தக் குரலிசை தேர்வில், வயது 15 – 25க்கு இடைப்பட்டவர்கள் கலந்துகொள்ளமுடியும்.
சாஸ்திரீய சங்கீதம் ,மெல்லிசைப்பாடல், கிராமியப்பாடல்களை உள்ளடக்கிய தமிழர் பண்பாட்டுக்கு அமைவானதாக நடைபெறவுள்ள இப்போட்டியில் கலந்துகொள்ள ஆர்வமுள்ளவர்கள், செப்டம்பர் 12ஆம் திகதிக்கு முன்னர் தமது விண்ணப்பப்படிவங்களை அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகினிறனர்.
இதற்கான விண்ணப்பப்படிவங்கள், ஆளுநர் செயலகத்திலோ அல்லது வடமாகாண சபையின் np.gov.lk எனும் இணையத்தளத்திலோ பெற்றுக்கொள்ள முடியும்.
விண்ணப்பப்படிவத்தை, “வடக்கின் குரலிசை” எனத் தலைப்பிட்ட, வட மாகாண ஆளுநர் செயலகம், பழைய பூங்கா, சுண்டுக்குளி , யாழ்ப்பாணம் எனும் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலதிக விவரங்களுக்கு தொலைபேசி இலக்கம்: 021 221 9375, தொலைநகல் இலக்கம்: 021 221 9374 மின்னஞ்சல்: pronpgovernor@gmail.com
loshini Thursday, 03 October 2019 12:29 PM
Melody songs mean movies songs or traditional song ???pls reply
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
16 May 2025
16 May 2025