Freelancer / 2024 செப்டெம்பர் 13 , மு.ப. 10:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடக்கு புகையிரத மார்க்கத்தின் அனுராதபுரம் முதல் மஹவ வரையிலான புகையிரத பாதையைத் திருத்தும் பணிகளை உரிய முறையில் பூர்த்தி செய்யாமல், அதை திறப்பதை இடைநிறுத்துமாறு கோரி லொகோமோட்டிவ் இயக்குநர்கள் பொறியியலாளர்கள் சங்கம், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
குறித்த சேவை மார்க்கத்தின் சமிக்ஞை அமைப்பு சீரமைக்கப்படவில்லை எனவும், அதனால் புகையிரத மார்க்கம் பாதுகாப்பற்ற நிலையில், உள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இவ்வாறான பின்னணியில் வடக்கு புகையிரத மார்க்கத்தின் அனுராதபுரம் முதல் மஹவ வரையிலான மார்க்கத்தின் திருத்தப் பணிகள் முழுமையுடையாத நிலையில், ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு அதனைத் திறக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாக லொகோமோட்டிவ் இயக்குநர்கள் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. R
8 hours ago
12 Apr 2026
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
12 Apr 2026
12 Apr 2026