Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 03 , பி.ப. 02:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.குகன்
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திலிருந்து கிடைக்கப்பெற்ற வாகன இலக்கத் தகடுகளின் பட்டியல், யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேச செயலகங்களிலும் மாவட்டச் செயலகத்திலுள்ள மாவட்ட மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களத்திலும் பொதுமக்களின பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் மாவட்டச் செயலக இணையத்தளத்திலும் பார்வையிடலாம்.
புதிதாக வாகனங்களைப் பதிவுசெய்த உரிமையாளர்கள், வாகனப் பதிவுப் புத்தகத்தையும் தேசிய அடையாள அட்டையையும் பழைய வாகன இலக்கத்தகடுகள் மற்றும் வாகன இலக்கம் பொறித்த ஒட்டுத் தாள் என்பவற்றையும், யாழ்ப்பாணம் மாவட்ட மோட்டார் வாகனப் போக்குவரத்து அலுவலகத்தில் சமர்ப்பித்து, தங்கள் வாகனங்களுக்குரிய இலக்கத்தகடுகளைப் பெற்றுக்கொள்ளுமாறு, யாழ்ப்பாணம் மாவட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்கள பிரதி ஆணையாளர் அறிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago