Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம். றொசாந்த் / 2019 பெப்ரவரி 05 , பி.ப. 12:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
“யாழ்.போதனா வைத்தியசாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது. அவ்வாறான சம்பவங்கள் எதுவும் நடைபெறவும் இல்லை. விசாரணைகளும் நடைபெறவில்லை” என யாழ்.போதான வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
“யாழ்.போதனா வைத்தியசாலை 500 க்கும் மேற்பட்ட தாதியர்கள் கடமையாற்றும் புனிதமான இடம். எனவே இங்கு கடமையாற்றுபவர்கள் நோயாளர்களை கவனத்துடன் பரிவுடனும் கடமையாற்றுகின்றனர்.
வைத்தியசாலை தொடர்பில் வெளியாகும் தவறான செய்தியால் வைத்தியசாலை சேவைக்கு இடையூறாக உள்ளது. அவ்வாறான செய்திகள் வெளிவந்தமை தொடர்பில் பொலிஸ் நிலையத்தில். முறைப்பாடு செய்துள்ளோம். இந்த செய்தியால் இங்கு கடமையாற்றும் ஊழியர்களுக்கு மனச்சோர்வு ஏற்பட்டு சேவையில் தடங்கல் ஏற்பட்டுள்ளது.
தாதியர்கள் தவறிழைத்தால் அது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டால் முதலில் உள்ளக விசாரணைகள் நடைபெற்றிருக்கும். ஆனால் அவை எதுவும் நடைபெறாத நிலையில் அவ்வாறு செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
அன்மையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவருக்கு சிகிச்சையளித்தமையில் குறைபாடு உள்ளது என நோயாளியின் உறவினரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய விசாரணைகள் நடைபெறுகின்றன. அந்த செய்தியினையே இணையத்தளங்கள், ஊடகங்கள் திரிவுபடுத்தி செய்தியினை வெளியிட்டுள்ளன.
பெரும்பாலும் பெண் தாதியர்களே இங்கே பணியாற்றுகின்றனர். இந்த செய்தியால் அவர்களே பெரும்பாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தாதியர்களின் மனவுளைச்சல் காரணமாக சேவையாற்றுவதில் தடைகளை எதிர்கொண்டுள்ளனர். அதனால் சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளன.
ஏற்கனவே வைத்தியசாலையில் தாதியர்கள் பற்றாக்குறை நிலவுகின்றன. இவ்வாறான செய்தியால் தாதிய சேவைக்கு வர பெண்கள் தயங்குவார்கள்” என மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, யாழ்.போதனா வைத்தியசாலை தாதியர்கள் இன்று (05) பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
18 minute ago
24 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
24 minute ago