Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Editorial / 2019 ஓகஸ்ட் 09 , பி.ப. 06:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த மஹோற்சவ காலத்தில் கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள், பொலிஸாரால் சோதனைக்குட்படுத்தப்படுவது தொடர்பாக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், ஸ்கானர் இயந்திரங்களை நல்லூர் கோவில் சுற்றாடலில் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்களை தொடர்ந்து எழுந்துள்ள பொதுவான அச்ச உணர்வை அடிப்படையாக கொண்டு பக்தர்களின் நலன் கருதியும், கோவிலின் நலன் கருதியும் அதியுச்ச பாதுகாப்பு நல்லூர் ஆலயத்திற்கு வழங்கப்பட்டுள்ளதுடன், பக்தர்கள் சோதனையின் பின்பே கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்த விடயம் தொடர்பாக பல விமர்சனங்கள் எழுந்துள்ளமை தொடர்பில் நேற்றய தினம் ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து கூறும்போதே, ஆளுநர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,
பாதுகாப்பு ஒழுங்குகள் எப்போதும் மக்களுடைய சுதந்திரத்தை பறிப்பதாகவே அமையும். இந்நிலையில் நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பும் அவ்வாறானதே. அதனை மக்களும் ஆலய நிர்வாகமும் முழு மனதுடன் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை என்றார்.
“வடக்கு மாகாண சபை ஊடாக 4 ஸ்கானர் இயந்திரங்களை குத்தகைக்கு பெற தீர்மானித்துள்ளோம். இதன் ஊடாக பக்தர்களை நிறுத்தி சோதனை செய்யவேண்டிய இல்லை. ஸ்கானர் இயந்திரம் (வெடிபொருள்கள், உலோக பொருட்களை கண்டறியும் கருவி) ஊடாக அனுப்பினால் போதுமானதாக இருக்கும்.
“இதற்கடையில், வேறு சிலரும் அவ்வாறு இயந்திரத்தை பொருத்த முயற்சிப்பதாக அறிகிறோம். அது நல்லது. எவ்வளவு தேவையோ அதனை நாங்களும் பெற்றுக் கொடுக்கலாம்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago
5 hours ago