2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 62 பேருக்கு எதிராக யாழில் வழக்குப் பதிவு

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 12 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கே.பிரசாத்)

கடந்த ஒரு வார காலத்தில் பல்வேறு குற்றச் செயல்களளுடன் தொடர்புடைய 62 பேருக்கு எதிராக வழக்கு பதிசெய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா  அதிபர் எரிக் பெரெரா தெரிவித்துள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மதுபோதையில் வாகனம் செலுத்தியமை, சூழல் மாசடைவை ஏற்படுத்தியமை, அனுமதியின்றி மாடுவெட்டியமை, பொது இடத்தில் குடித்துவிட்டு இடையூறு ஏற்படுத்திமை போன்ற குற்றச் செயல்கள் இதில் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 22 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் கடந்த ஒரு வார காலத்தில் அனைத்து பொலிஸ் பகுதிகளிலும் சிவில் பாதுகாப்பு குழுக் கூட்டம் நடைபெற்றுள்ளதுடன் அனைத்து பிரதேசங்களிலும் டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X