Kogilavani / 2011 ஜூன் 09 , மு.ப. 07:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தின் கீழ் யாழ். குடாநாட்டின் அனைத்து பிரதான வீதிகளையும் அபிவிருத்தி செய்யும் பணிகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ் ஏ தர வீதிகள் 14, பி தர வீதிகள் 9, மற்றும் 5 பாலங்கள் என்பன அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.
சில மாதங்களுக்கு முன்பே யாழ். பருத்தித்துறை வீதி காபட் வீதியாக புனரமைக்கப்பட்டது. தற்போது யாழ் - பலாலி வீதியும் காங்கேஸன்துரை வீதியும் புனரமைக்கப்பட்டு வருகின்றன. இவ்வீதிகளின் புனரமைப்பிற்காக அரசாங்கம் 2000 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.
ஏ- 9 வீதியானது சீனாவின் உதவியுடன் புனரமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்வீதிகளின் புனரமைப்புப் பணிகளை எதிர்வரும் 2013 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாத்தித்திறகுள் நிறைவு செய்தற்கு வீதி அபிவிருத்தி சபை திட்டமிட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி சபையின் யாழ்பாணத்திற்கான சிரேஷ்ட பொறியியலாளர் வி.சுதகாரன் தெரிவித்தார்.
யாழ்பாணத்தில் பிரதான பாலங்களான யாழ் - காரை நகர் (மானிப்பாய்) மற்றம் சோரம்பற்று -தாளையடி வீதிகள் அண்மையில் புனரமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
20 Dec 2025
20 Dec 2025
20 Dec 2025
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Dec 2025
20 Dec 2025
20 Dec 2025
20 Dec 2025