2025 மே 20, செவ்வாய்க்கிழமை

'கிழக்கு மாகாண சபை தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க தவறியவர்கள் 6ஆம் திகதி வரை வாக்களிக்க முடியும்'

Super User   / 2012 செப்டெம்பர் 03 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரஜனி)

கிழக்கு மாகாண சபை தேர்தலில் வாக்களிக்க தவறிய 3 மாவட்ட தபால் மூல வாக்களிக்காளர்கள் எதிர்வரும் 6ஆம் திகதி வரை வாக்களிப்பினை மேற்கொள்ள முடியும் என யாழ். மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் பொ. குகநாதன் தெரிவித்தார்.

கடந்த 27ஆம் மற்றும் 28ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பிளை மேற்கொள்ள தவறியவர்கள் எதிர்வரும் 6ஆம் திகதி வரை வாக்களிக்க தேர்தல் திணைக்களத்தினால் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்தில 3 மாவட்டங்களையும் சேர்ந்த 8,414 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் யாழ். மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் 694 பேர் வாக்களிக்க தவறியுள்ளார்கள். அவர்களில், யாழ். மாவட்டத்திலும 327 வாக்காளர்;களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 367 வாக்காளர்களும் உள்ளனர் என அவர் குறிப்பிட்டார்.

இவர்களில் நேற்று ஞாயிற்றுக்கிழமை வரை 117 பேர் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் வாக்களித்துள்ளார்கள். அதேவேளை, 85 சதவீதமான வாக்குகள் தற்போது பூரணப்படுத்தப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X