Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஜூலை 12 , பி.ப. 05:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம் - வலிகாகம் வடக்குப் பிரதேசத்தில், பாதுகாப்புப் படைகளின் வசமுள்ள பொதுமக்களின் காணிகளில் 27.5 ஏக்கர், பொதுமக்களிடம் மீண்டும் கையளிக்கும் நிகழ்வு, ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், தலைமையில், இன்று (12) முற்பகல் தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
யுத்த காலத்தில், பாதுகாப்புப் படையினரால் கையகப்படுத்தப்பட்ட பொதுமக்களின் காணிகளை மீண்டும் அவர்களிடமே கையளிக்க வேண்டுமென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக்கருவுக்கமைய, யாழ். மாவட்டப் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சியின் ஒத்துழைப்போடு விடுவிக்கப்படும் குறித்த காணிகள், ஆளுநரிடம் கையளிக்கப்பட்டதுடன், ஆளுநர் அதனை, யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரிடம் வழங்கினார்.
2015ஆம் ஆண்டு முதல் இன்று வரை, யாழ். மாவட்டத்தில் பாதுகாப்புப் படைகளின் வசமிருந்த காணிகளில் 2,963 ஏக்கர் காணிகள், பொதுமக்களிடம் மீண்டும் கையளிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் பல காணிகள், படிப்படியாக விடுவிக்கப்படவுள்ளமையைக் குறிப்பிட்ட ஆளுநர், அதற்கான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டு உள்ளதாகவும் இதன்போது தெரிவித்தார்.
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago