2025 மே 21, புதன்கிழமை

கட்டாக்காலி மாடுகளால் கவலை

A.P.Mathan   / 2011 ஜூன் 06 , பி.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

(தாஸ்)

அரியாலை கிழக்கும் பகுதியில் கட்டாக்காலி மாடுகளை பாடுகாப்பு வேலியமைத்துப் பிடிக்கப்பட்டுள்ள போதும் அதனை ஏலம் விடுவதற்கு விவசாய மற்றும் கால்நடை வளர்ப்போர் திணக்களங்கள் நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளவில்லை எனவும் அதனை வந்து பார்க்கவும் இல்லை எனவும் அப்பகுதி கிராம அபிவிருத்திச்சங்க தலைவர் தெரிவித்தார்.

கட்டாக்காலிகளாக திரிகின்ற மாடுகளை பிடிக்கும் நடவடிக்கைகள் அண்மைக்காலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையிலேயே மேற்படி மாடுகள் பிடிக்கப்பட்டன. கிராம அபிவிருத்தி சங்கத்தினால் பிடித்து வைத்துள்ள மாடுகளை தொடர்ச்சியாக அடைத்து வைத்துள்ளமையால் இவற்றைப் பராமரிக்க முடியாதுள்ளதாகவும் கிராம அபிவிருத்திச்சங்க தலைவர் கவலை வெளியிட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .