Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Menaka Mookandi / 2011 ஜூன் 13 , மு.ப. 10:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
இந்திய மீனவர்கள் இலங்கை வட கடற்பகுதிக்குள் அத்துமீறி ஊடுருவுவதை கட்டுப்படுத்தி மீனவர்களின் சொத்துக்களையும் வடகடல் வளத்தையும் பாதுகாப்பதற்காக காங்கேசன்துறைக் கடற்பகுதி தொடக்கம் சுண்டிக்குளம் வரையான கடற்பகுதியில் பாதுகாப்புக் கடற்படையின் விசேட அணியினரை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடபிராந்திய கடற்படைக் கட்டளைத்தளபதி ரியல் அட்மிரல் ஆர்.சி. விஜயவர்தன தெரிவித்துள்ளார்.
வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் சமாசத்தில் வடமாகாண மீனவ சமாசப் பிரதிநிதிகளுக்கும் வடபிராந்திய கடற்படையினருக்கும் இடையே இன்று திங்கள் கிழமை காலை நடைபெற்ற சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளதாக வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் சமாசத் தலைவர் அ.எமிலியாம் பிள்ளை கூறினார்.
வடகடல் பாதுகாப்பு தொடர்பாக ஆராய்வதற்கு விசேடமாக புதிய கடற்படை அணியினரை ஈடுபடுத்தி இந்திய தழிழக மீனவர்களின் வடகடல் அத்துமீறல்கள் எதிர்காலத்தில் தடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வடபிராந்திய கடற்படைக் கட்டளைத்தளபதி தெரிவித்துள்ளார்.
இனிவரும் காலங்களின் வடகடல் வளங்கள் பாதுகாக்கப்படும் என்ற உறுதி மொழியும் வடபிராந்திய கடற்படைக் கட்டளைத்தளபதி வழங்கியுள்ளதாக அவர் அ.எமிலியாம் பிள்ளை குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago