Super User / 2011 ஜூன் 14 , பி.ப. 05:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஹேமந்த்)
பிரித்தானியாவின் இலங்கைக்கான உதவி உயர்ஸ்தானிகர் மார்க் கூடிங் மற்றும் தூதரகத்தின் அரசியல் பிரிவுத் தலைமை அதிகாரி டேவிட் பேகன் ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதிக் குழுக்களின் தலைவருமான மு.சந்திரகுமாரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
யாழ்ப்பாணத்திலுள்ள 'எக்ஸ்போ' விடுதியில் இன்று காலை நடைபெற்ற இந்தச் சந்திப்பில், யுத்தத்திற்கு பின்பு வடபகுதியின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாகவும் குறிப்பாக மக்களின் இயல்பு வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றங்களைப் பற்றியும் பேசப்பட்டதோடு புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுலையானவர்கள் சமூகத்துடன் ஒருங்கிணைந்துள்ளமை மற்றும் அவர்களுடைய வாழ்வாதார மேம்பாடு ஆகியன குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
மேலும் மீள்குடியேற்றம், மீள்குடியேறிய பிரதேசங்களின் அபிவிருத்தி, மக்களின் வாழ்வாதார மேம்பாடு என்பவற்றுக்கு பிரிட்டிஷ் அரசினுடைய உதவிகளின் அவசியம் பற்றி பிரித்தானிய உதவி உயர் ஸ்தானிகருக்கு எடுத்துக்கூறப்பட்டதோடு யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களின் அபிவிருத்திக்கு பிரிட்டிஷ் அரசு தொடர்ந்தும் உதவிகளை வழங்கவேண்டும் எனவும் நாடாளுமன்ற பிரதிக்குழுக்களின் தலைவர் சந்திரகுமார் கேட்டுக்கொள்ளப்பட்டார்.
இந்தச்சந்திப்பில் பாரம்பரிய மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பு அலுவலர் ராஜ்குமார், பிரித்தானிய தூதரகத்தின் அரசியல் பிரிவுத்தலைமை அதிகாரி டேவிட் பேகன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
8 hours ago
8 hours ago
8 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
8 hours ago
20 Dec 2025