2025 மே 21, புதன்கிழமை

யாழில் நாடக விழா

Menaka Mookandi   / 2011 ஜூன் 16 , மு.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

கலை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சும் கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் யாழ்.மாவட்ட செயலகமும் இணைந்து நடத்தும் நாடக விழா எதிர்வரும் 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இவ்விழாவில் யாழ். திருமறைக்கலாமன்றத்தின் 'அற்றைத் திங்கள்' நாடகமும், யாழ். பல்கலைக்கழக நாடகமும் அரங்கியலும் மாணவர்களின் 'பூதத்தம்பி' இசை நாடகமும் மற்றும் கலை நிகழ்வுகளும் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வக்கு வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் போராசியர் வசந்தி அரசரட்ணம்; மற்றும் கலை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் அதிகாரிகள் பலரும் கலந்து கொள்ளவுள்ளதாக ஏற்பாட்டாளர் குழு அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .