Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Suganthini Ratnam / 2011 ஜூன் 16 , மு.ப. 08:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். மாவட்டத்தில் எதிர்வரும் ஜுலை மாதம் 23ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான இரு நாள் செயலமர்வு யாழ். மாவட்ட செயலகத்தில் எதிர்வரும் 19ஆம் 20ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
பாதுகாப்புடன் வன்முறையற்ற தேர்தலை எவ்வாறு நடத்துவது என்பது தொடர்பில் பொலிஸாருக்கும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடும் தரப்பினருக்கும் யாழ். தேர்தல் திணைக்கள அதிகரிகளுக்கும் விளக்கமளிக்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் ஆ.கருணாநிதி தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்டத்தில் இந்தமுறை நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான அனைத்து நடவடிக்கைகளையும் யாழ். மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகம் மேற்கொண்டு வருகிறது. தேர்தலின்போது வன்முறைகள் இடம்பெறாதவாறு கண்காணிப்பதற்கும் வன்முறையில் தாக்கத்தைக் குறைப்பதற்குமான நடவடிக்கைகள் குறித்து பாதுகாப்புத் தரப்பினருடன் ஆராயவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்தத் தேர்தலின்போது தேர்தல் விதிமுறைகளின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதுடன், வன்முறையற்ற தேர்தலை நடத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆ.கருணாநிதி குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago