2025 மே 21, புதன்கிழமை

த.தே.கூட்டமைப்பினர் மீது ஏதோ ஒரு பிரிவினரால் தாக்குதல் : மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க

Super User   / 2011 ஜூன் 18 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

ஏதோ ஒரு பிரிவினர் யாழ்ப்பாணத்தில் இயங்குவதாகவும் இவர்களாலேயே அளவெட்டியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கலாம் என தான் சந்தேகிப்பதாகவும் பாதுகாப்புப் படைகளின் யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.

"பொலிஸாரும் இராணுவப் பொலிஸாரும் இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைகளின் முடிவில் தான் அவர்கள் யார் என்பது தெரியவரும்" எனவும் அவர் தெரிவித்தார்.

இன்று சனிக்கிழமை மாலை யாழ். இராணுவ சிவில் அலுவலகத்தில் ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அளவெட்டியில் கடந்த வியாழனன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தின்போது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

இச்சம்பவம் நடைபெற்ற சமயம் தான் கொழும்பில் இருந்ததாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தொலைபேசியூடாக தனக்கு நடந்தவற்றை கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வு தொடர்பாக தாம் வருந்துவதாகவும், இனிவரும் காலங்களில் இவ்விதமான சம்பவம் நடைபெறாமல் பார்த்துக் கொள்வதாகவும் தெரிவித்த அவர், "இலங்கை ஒரு ஜனநாயக நாடு, எவரும் அரசியல் செய்யலாம் அதற்கு இராணுவம் தடையாக இருக்காது" என்றார்.
 


You May Also Like

  Comments - 0

  • ajan Sunday, 19 June 2011 12:10 AM

    எதோ ஒரு குழு? வேடிக்கை பதில்
    அங்கு சிவில் நிர்வாகம் இல்லை அங்கு ராணுவ நிர்வாகம் தான் இருக்கிறது.

    Reply : 0       0

    hari Sunday, 19 June 2011 12:15 AM

    சம்பவம் முடிந்ததும் மனம் வருந்தும் கலாசாரம் எப்போது முடியுமோ அப்போதுதான் மக்களுக்கு பாதுகாப்பு. இதற்கு வாய்ப்பே இல்லை.

    Reply : 0       0

    IBNU ABOO Sunday, 19 June 2011 03:10 AM

    மனம் வருந்துவதாக ஒரு பெரிய ராணுவ அதிகாரி அறிவிப்பது ஜனநாயக நாகரீகத்தின் ஒரு அடையாளமே. அவர் வேறு மாதிரி ராணுவ தொனியில் கடமை உணர்வின்றி பேசவில்லையே

    Reply : 0       0

    NAKKIRAN Sunday, 19 June 2011 03:30 AM

    மனம் வருந்துகின்றோம் சொல்லிவிட்டால் சரி? மக்களுக்கு தேவை நீதி .

    Reply : 0       0

    Hot water Sunday, 19 June 2011 04:11 AM

    ......... சோகமாக இருக்கும் மக்களின் முகத்தில் சிரிப்பை வரவழைப்பதற்காக.....

    Reply : 0       0

    ajan Sunday, 19 June 2011 06:13 PM

    தாக்குதல் நடத்தியவர்கள் அவர்கள்/இவர்கள்: சிங்ஹா !

    நல்லவேளை "அவன் இவன்" என்று பாலாவை சொல்லவில்லை.

    Reply : 0       0

    MARAN Monday, 20 June 2011 01:16 AM

    தளபதி சொல்வதில உண்மையிருக்கிறது . சில வாரங்களுக்கு முன்பு
    செய்தி. ஒரு குழு கிளிநொச்சி, வவுனியா, யாழில் செயல்படுவதாக கொழும்பு வழிகாட்டல் .

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .