2025 மே 21, புதன்கிழமை

யாழ்.மாநகரசபை உறுப்பினர்களால் உயிருக்கு அச்சுறுத்தல்: எதிர்க்கட்சி உறுப்பினர் விந்தன்

Kogilavani   / 2011 ஜூன் 30 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)
யாழ்.மாநகரசபை உறுப்பினர்கள் சிலர்  தன்னைக் கொலை செய்வதற்காக சதி முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தொடர்ந்தும் தனது உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாகவும் தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு யாழ்.மாநகர சபை எதிர்க்கட்சி உறுப்பினர் விந்தன் யாழ்.மாநகர சபைக் கூட்டத்தில் தெரிவித்தார்.

யாழ். மாநகர சபையின் ஆறாவது கூட்டத் தொடர் யாழ்.நகர மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தலைமையில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதன்போது உரையாற்றும்போரே எதிக்கட்சி உறுப்பினர் விந்தன் இதனை தெரிவித்தார். 

அங்கு அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

"எனது வீட்டுக்கு வெளியில் இனம் தெரியாத நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து பல மணிநேரங்கள் காத்து இருக்கின்றனர். இதனால் வீட்டை விட்டு வெளியில் வரமுடியத துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன். இந்த இனம்தெரியாத நபர்களுக்கும் யாழ். மாநகர சபை ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும் தொடர்பு இருப்பதாக நான் சந்தேகிக்கின்றேன்" என தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X