Menaka Mookandi / 2011 ஜூலை 06 , பி.ப. 02:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் யாழ்.மாவட்ட அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'இளைஞர்களிற்கான ஆன்மீக சிந்தனை' என்னும் தலைப்பிலான சர்வமத கருத்தரங்கு எதிர்வரும் 8ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு யாழ். நாவலர் கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் சர்வமதத் தலைவர்களும் கலந்து கொண்டு ஆசியுரை வழங்குவதுடன் ஸ்கந்தவரோதயக் கல்லூரி அதிபர் ஆறுமுகனும், பிரம்மகுமாரிகள் இராஜஜோக நிலையத்தின் யாழ். மாவட்ட இணைப்பாளர் சகோதரி ராதே கலந்து கொண்டு சிறப்புரையாற்றவுள்ளனர்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் யாழ்.மாவட்ட உதவி இயக்குநர் த.ஈஸ்வரராஜா தலைமையில் நடைபெறும் நிகழ்வுக்கு யாழ்.மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா பிரதம விருந்தினராகவும், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வடமாகாணப் பணிப்பாளர் திருமதி விமலேஸ்வரி காந்தரூபன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
2 hours ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
5 hours ago