2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

பெண்கள் மீதான வன்முறைகளுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்க ஏற்பாடு

Suganthini Ratnam   / 2011 ஜூலை 11 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். குடாநாட்டில் தற்போது கலாசார சீரழிவுகள், பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள்  அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. இவ்வாறான சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கு சட்ட  உதவி ஆணைக்குழுவின் உதவியை நாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராசா தெரிவித்தார்.

அண்மையில் சாவகச்சேரி மாவட்ட நீதிமன்றத்திற்கு விஜயம் செய்த சட்ட உதவி ஆணைக்குழுவின் தலைவர் நீதியரசர் எம்.கே.உடலகம மற்றும் சட்ட உதவி ஆணைக்குழுவின் உறுப்பினர்களுடன் மேற்படி விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியதாகவும் அவர் கூறினார்.

பாலியல் துன்புறுத்தல்கள், குடும்பத்திலோ அல்லது வேறிடங்களிலோ பெண்கள் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகும்; சந்தர்ப்பத்தில் நேரடியாக நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்யும் பொறிமுறை உருவாக்கப்படவுள்ளது. இவ்வாறான முறைப்பாடுகள் தொடர்பில் பொலிஸார் விசாரணை செய்து நடவடிக்கை  வகையிலான திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராசா தெரிவித்தார்.

சாவகச்சேரி நீதிமன்றில் ஓர் அங்கமாக இலவச சட்ட உதவி மன்றம் மற்றும் சமுதாய சீர்திருத்த பிரிவு விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X