Suganthini Ratnam / 2011 ஓகஸ்ட் 08 , மு.ப. 03:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். மாவட்டத்தில் டெங்குநோயின் தாக்கம் அதிகரித்து வருவதினால் பொதுமக்கள் தாங்கள் குடியிருக்கும் பகுதிகளையும் தத்தமது வீடு மற்றும் சுற்றுச்சூழலையும் சுத்தமாக வைத்திருக்குமாறு யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பார் வைத்தியக் கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்
யாழ். மாவட்டத்தில் டெங்குநோயின் தாக்கம் திடீரென அதிகரித்துக் காணப்படுவதுடன், இந்த மாதத்தின் முதல் வாரத்தில் ஜந்து பேர் டெங்குநோய்த் தொற்றுக்குள்ளாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.
யாழ். நகர வேலைத்தளங்களிலுள்ள குப்பை கூழங்களிலும் வடிகால்களிலும் நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ளதுடன், உடனடியாக அவற்றை துப்பரவு செய்து சுத்தமாக வைத்திருக்குமாறும் ஆ.கேதீஸ்வரன் குறிப்பிட்டார். தமது சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருக்கத் தவறின் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
4 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago
8 hours ago