Super User / 2011 நவம்பர் 22 , பி.ப. 12:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ்ப்பாணத்தில் விபசார நடவடிக்கையில் ஈடுபட்டார்கள் என சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்பட்டவர்களில் காதலர்கள் எனக்கூறிய இருவரை பதிவுத் திருமணம் செய்து திருமண அத்தாட்சி பத்திரத்தை நீதிமன்றத்திற்கு சமர்பிக்குமாறு யாழ். மாவட்ட நீதிபதி அ. பிரேமசங்கர் இன்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டார்.
இவ்விருவரும் தாங்கள் நீண்ட கால காதலர்கள் எனவும் பதிவு திருமணம் செய்வதற்கு விரும்புவதாகவும் சட்டத்தரணி மூலம் மன்றுக்கு தெரியப்படுத்தினர்.
இதனையடுத்து, இவர்கள் இருவரையும் இரு சரீர பிணையில் செல்ல அனுமதித்த நீதிபதி, இவ்விருவரையும் பதிவுத் திருமணம் செய்து நீதிமன்றத்திற்கு திருமண அத்தாட்சி பத்திரத்தை சமர்பிக்குமாறும் உத்தரவிட்டார்.
இந்த காதலர்கள் சார்பாக சட்டத்தரணிகளான என்.சிறிகாந்தா மற்றும் மு.றெமிடியஸ் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
கடந்த நவம்பர் 13 ஆம் திகதி யாழ். விடுதியொன்றில் பொலிஸார் மேற்கொண்ட முற்றுகையொன்றின்போது விபசாரத்தில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 13 பேர்கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அவர்களில் 8 பேர் 28 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்களில் இருவருக்கே நீதிபதி இன்று மேற்படி உத்தரவை பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
32 minute ago
5 hours ago
9 hours ago
manithan Wednesday, 23 November 2011 12:00 AM
நல்ல தீர்வு.
Reply : 0 0
Kethis Wednesday, 23 November 2011 12:16 AM
சூப்பர் சூப்பர்
Reply : 0 0
GM Wednesday, 23 November 2011 01:31 PM
நல்லா இருந்தா சரி ..... 16 பெற வேண்டிய தேவை நமக்கு இப்போது உண்டு ...
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
5 hours ago
9 hours ago