Suganthini Ratnam / 2011 டிசெம்பர் 09 , மு.ப. 09:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். நீர்வேலிப் பகுதியில் கணவன், மனைவி ஆகிய இருவரையும் வெட்டிப் படுகொலை செய்ததாக தெரிவிக்கப்படும் நபரை கைதுசெய்யும் முகமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவர் பற்றிய தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்களை வெட்டியதாகத் தெரிவிக்கப்படும் நபர் தற்போது தலைமறைவாகியுள்ளதாகவும் இவர் வெளிநாடொன்றிலிருந்து வந்ததாகவும் பொலிஸார் கூறினர். இந்த நிலையிலேயே இவர் பற்றிய தகவல்கள் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
யாழ். நீர்வேலிப் பகுதியில் காணிப் பிரச்சினை காரணமாக கணவன், மனைவி ஆகிய இருவரும் நேற்று வியாழக்கிழமை இரவு அவர்களின் உறவினரெனத் தெரிவிக்கப்படும் ஒருவரால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
நீர்வேலியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் பெற்றோரான மார்க்கண்டு உதயகுமார் (வயது 55) அவரது மனைவி வசந்தமலர் (வயது 45) ஆகியோரே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டவர்கள் ஆவர்.
இவர்கள் நேற்றிரவு அயலிலுள்ள தனியார் வைத்தியசாலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, அவர்களின் வீட்டு வளவினுள் ஒளிந்திருந்த சந்தேக நபர் இவர்கள் இருவரையும் கூரிய ஆயுதத்தினால் தாக்கினார். இந்த நிலையில் கணவனும் மனைவியும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
இதனைத் தடுக்க முற்பட்ட அவர்களின் மகனும் குறித்த நபரால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
4 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
4 hours ago
4 hours ago