Menaka Mookandi / 2012 ஜனவரி 19 , மு.ப. 11:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
தென்னிந்தியக் கடற்பிராந்தியத்திலிருந்து யாழ். மாதகல் கடற்பகுதிக்கு கடலட்டைகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் இடம்பெறுவதாக தகவல் கடைத்துள்ளதாக யாழ். பிராந்திய கடற்றொழில் மற்றும் நீரியல் துறை திணைக்களப் பணிப்பாளர் எஸ்.ரவீந்திரன் தெரிவித்தார்.
யாழ். பிராந்திய கடற்றொழில் மற்றும் நீரியல்துறைத் திணைக்களத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
யாழ். குடாநாட்டுக்கு கடல்மார்க்கமாக போதைப்பொருள் கடத்தல் நடைபெற்று வருவதாகவும் அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு கடற்படையின் உதவி கோரப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு இந்தியாவிலிருந்து யாழ். நெடுந்தீவு கடற்பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
32 minute ago
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
5 hours ago
9 hours ago