2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

யாழில். இளைஞனை காணவில்லை

Kanagaraj   / 2013 மே 15 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ்ப்பாணம், கோப்பாய் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காணாமற்போயுள்ளதாக கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

யாழ். கோப்பாய் மத்தி, வெள்ளுருவப் பிள்ளையார் கோவிலடியைச் சேர்ந்த 28 வயதுடைய சிவலிங்கம் தவக்குமார் என்ற இளைஞரே காணாமற்போயுளளதாக அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டில் இருந்து கடந்த 26ஆம் திகதி புறப்பட்டவர் இதுவரை வீடுவந்து சேரவில்லை எனவும் அவருடன் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை எனவும் பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர்.

சிவலிங்கம் தவக்குமார் காணாமற்போனமை தொடர்பில் அவரது உறவினர்களால் முறைப்பாடொனறு கிடைக்கப்பெற்றுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

காணாமல் போனவர் முன்னாள் போராளி என்றும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், இவ்விடயம் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X