2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

நிறை குறைந்த பாண் விற்பனை செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Super User   / 2013 மே 15 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

பாணின் நிறை குறைவாக விற்பனை செய்யும் கடை உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பபடுமென்று யாழ். மாவட்ட செயலக  நிறுத்தல் அளவை கருவிகள் முத்திரையிடல் திணைக்கள அதிகாரி வி. கிருஸ்ணதாஸ் இன்று தொவித்தார்.

பாண் உற்பத்தி செய்யும் பேக்கரி நிலையங்களில் பாணின் நிறை குறைவாக உற்பத்தி செய்வது நிறுத்தல் அளவை கருவி முத்திரையிடும் போது கண்டு பிடிக்கப்பட்டது.

இந்நிலையில், பாண் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் நடமாடு;ம் சேவை வண்டிகளில் பரிசோதனை மேற்கொள்ளும் போது, பாணின் நிறை குறைவாக விற்பனை செய்வது உறுதிப்படுத்தப்பட்டால், விற்பனையாளர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்றும், விற்பனையாளர்கள் பாணின் நிறை 450 கிராம் இருக்கா என பரிசீலனை செய்து விற்பனை செய்யுமாறும் அவ்வதிகாரி கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன், கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில், 799 விற்பனை நிலையங்களில் நிறுத்தல் அளவைகள் கருவிகள் பரிசீலிக்கப்பட்டு முத்திரையிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

மார்ச் மாதத்தில் சாவகச்சேரி, கொடிகாமம், யாழ்ப்பாணம் பிரதேசங்களில் 537 விற்பனை நிலையங்களும், ஏப்ரல் மாதத்தில்  அனலைதீவு, காரைநகர், ஊர்காவற்துறை பிரதேசங்களில் 262 நிலையங்களும் பரிசீலிக்கப்பட்டு முத்திரையிடப்பட்டன. அதில் 28 விற்பனை நிலையங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X