2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

இருதலைக் கொள்ளியாக கிராம சேவகர்கள்

A.P.Mathan   / 2013 மே 18 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா
 
யாழ். மாவட்ட கிராம அலுவலர்கள் இருதலைக் கொள்ளி எறும்பாக தவிக்கும் நிலைமைக்கு உள்ளாகியுள்ளார்கள். 2013ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்புகள் திருத்தும் பணிகள் தற்போது இலங்கை முழுவதும் மேற்கொள்ளப்படுகின்றன.
 
யாழ். மாவட்டத்திலும் இப்பணி தொடர்வதால், தற்போது கிராம அலுவலா்கள் பெரும்பாலானர்வர்கள் வீடு வீடாக சென்று படிவங்களை வழங்கி வருவதுடன் ஒரு சிலரின் படிவங்களை உடனேயே பதிவு செய்து பெற்றும் வருகின்றார்கள்.
 
குறிப்பிட்ட பீசி படிவங்களை வழங்கும்போது இலங்கை தேர்தல் ஆணையாளரினால் பீசி படிவங்கள்  நிரப்புவது சம்பந்தமாக பத்து அறிவுறுத்தல்கள் கொண்ட துண்டுப் பிரசுரங்களும் கூட வழங்கப்பட்டு வருகின்றன.
 
அந்தப் படிவத்தில் வாக்காளர் பதிவுகளை மேற்க்கொள்வதற்கான இறுதி திகதி ஜூலை மாதம் 1 எனவும், படிவங்களை கிராம அலுவலர்கள் இந்த மாதம் 15ஆம் திகதியில் இருந்து அடுத்தமாதம் 02ஆம் திகதி வரை வழங்க வேண்டும் எனவும், வழங்கப்பட்ட படிவங்களை அடுத்தமாதம் 02ஆம் திகதியில் இருந்து மீளப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
ஆனாலும் யாழ். மாவட்டத்தில் கிராம அலுவலர்கள், பொதுமக்களிடம் படிவங்களை கொடுத்துவிட்டு இந்த மாதத்துக்குள் படிவங்களை தாருங்கள், நாங்கள் அடுத்த மாத முற்பகுதியில் யாழ். செயலகத்தில் குறிப்பிட்ட படிவங்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள். 
 
பொதுமக்களிடம் இதனையிட்டு பலத்த முரண்பாடுகள் கிராம அலுவலா்களுக்கிடையே ஏற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X