2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

காரைநகர் குடிநீர் விநியோகத்தில் சீரின்மை

A.P.Mathan   / 2013 மே 18 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா
 
காரைநகரில் குடிநீர் விநியோகம் சீரற்று இருப்பதினால் தாங்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகும் நிலைமை காணப்படுவதாக அந்தப் பகுதியில் வாழும் பொதுமக்கள் கவலையுடன் தெரிவிக்கின்றார்கள்.
 
கடந்த பல வருடங்களாக காரைநகர் மக்களின் குடிநீர் விநியோகம் சுன்னாகத்தில் இருந்து பௌசர்கள் மூலம் எடுத்து செல்லப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றது. லண்டன் கரைநகர் நலன்புரிச் சங்கமும் காரைநகர் அபிவிருத்தி சங்கமும் இணைந்து இந்தப் பணியை மேற்கொண்டு வருகின்றார்கள். 
 
காரைநகர் பகதியில் குடிநீரை பொதுமக்கள் பெற்றுக்கொள்வதற்கு வசதியாக அறுநூறுக்கும் மேற்பட்ட நீர்த் தாங்கிகள் வீடு வீடாக வைக்கப்பட்டு, இக்குடிநீர் விநியோகம் இடம்பெற்று வருகின்றது.
 
ஆனாலும் கடந்த சில மாதங்களாக குடிநீர் விநியோகத்தில் ஒரு சீரற்றதன்மை காணப்படுவதாகவும் இதனால் பொதுமக்கள் குடிநீரைப் பெறுவதில் சிரமங்களுக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அந்தப் பகுதியில் உள்ள மக்கள் கவலையுடன் தெரிவிக்கின்றார்கள்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X