2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

சமுர்த்தி உத்தியோகத்தர்கள் கையொப்பமிடத் தேவையில்லை: திலகஸ்ரீ

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 14 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ்.மாவட்டத்தில் பணிபுரியும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் தமது வரவினை உறுதிப்படுத்த சமுர்த்திச் சங்கங்களில் கையொப்பமிடத் தேவையில்லையென சமுர்த்தி அதிகார சபையின் பணிப்பாளர் திலகஸ்ரீ தெரிவித்துள்ளார்.

யாழ் நீராவியடி பிள்ளையார் கோவிலடியில் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் நடைபெற்ற சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கான கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்டத்தில் கடமையாற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் கடந்த 7 வருடங்களாக அலுவலக நாட்களில் தங்கள் தங்கள் சமுர்த்தி வங்கிக்குச் சென்று கையொப்பமிட்ட பின்னரே தமது களவேலைகளில் ஈடுபட்டு வந்தனர்.

இருந்தும் நேற்று வெள்ளிக்கிழமையிலிருந்து தமது வரவினை உறுதிப்படுத்த கையொப்பமிடத் தேவையில்லையென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X