2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

தந்தை செல்வாவுக்கு அஞ்சலி செலுத்திய பின் சத்தியப்பிரமாணம்

Menaka Mookandi   / 2013 ஒக்டோபர் 09 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

'தந்தை செல்வாவிற்கு அஞ்சலி செலுத்திய பின்னர் வடமாகாண சபை அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொள்வார்கள்' என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்தார்.

வடமாகாண சபை அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு தந்தை செல்வா சதுக்கத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறுமென அவர் தெரிவித்தார்.

வடமாகாண சபையின் அமைச்சர்கள் தெரிவு இதுவரையில் வெளியிடப்படாதது தொடர்பாக கேட்டபோது, அமைச்சர்கள் தெரிவு நாளை  வியாழக்கிழமை நிறைவு பெறாவிட்டால், நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை சத்தியப்பிரமாண நிகழ்வின் போது அமைச்சர்களின் பெயர்கள் அறிவிக்கப்படலாம் என்றும் அவர் மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .