2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

பிரதேச சபையின் ஆதன வரி கணினி மயமாக்கல்

Super User   / 2013 டிசெம்பர் 05 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

வலி. தெற்கு பிரதேச சபையின் ஆதன வரி நடவடிக்கைகள் யாவும் கணினி மயப்படுத்தப்பட்டுள்ளது என பிரதேச சபையின் தவிசாளர் தி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

வலி. தெற்கு பிரதேச சபையின் உப அலுவலகங்களான ஏழாலை, சுன்னாகம், மருதனார்மடம் ஆகிய பிரதேசங்களிலுள்ள உப அலுவலகங்களின் ஆதன வரி பணிகள் கணினி மயப்படுத்தப்பட்டுள்ளதன் மூலம் காணிகளின் உரிமையாளர்களுக்கு வழங்கும் சேவைகள் இலகுபடுத்தப்பட்டுள்ளன என அவர் குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில் ஆதனவரி செலுத்துபவர்கள் தமது காணிகளுக்கான வரிகளை வலி. தெற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட எந்தவொரு உப அலுவலகத்திலும் செலுத்தக் கூடிய வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X