2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

நீதி, நிர்வாகம் நாணயத்தின் இருபக்கங்கள்

Suganthini Ratnam   / 2014 மார்ச் 07 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா, நா.நவரத்தினராசா

நீதி, நிர்வாகம் ஆகிய இரண்டும் நாணயத்தின் இருபக்கங்கள் போன்றவையென   யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ரூபினி வரதலிங்கம் தெரிவித்தார்.

யாழ். மாவட்ட 'கிராமிய சிவில்; பாதுகாப்புக் குழுவை பலப்படுத்தல்' தொடர்பான கூட்டம் நீராவியடி இலங்கை வேந்தன் கலாமன்றத்தில் வெள்ளிக்கிழமை  (07) நடைபெற்றது. இதில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

நாம் கலை, பண்பாடு, பாரம்பரியங்கள், கலாசார விழுமியங்களைக் கொண்ட  சமூகத்துடன் இணைந்து வாழ்கின்றோம்.  இந்த அடையாளங்களை சரியான முறையில் வலுவூட்டவும் தவறுகள் இடம்பெறாது பாதுகாக்கவும் சிவில் பாதுகாப்புக்குழுவினர் தங்களது கடமையைச் செய்ய வேண்டியவர்களாக இருக்கின்றனர்.

மதம், மொழி, சுதந்திரம் இவற்றை எமது மக்கள் உரிய முறையில் கடைப்பிடிக்க வேண்டும். சரியானவற்றை சரியான முறையில் செய்ய வேண்டும். இவற்றுக்காக  அனைவரும் ஒன்றிணைந்து நல்லதொரு வழிகாட்டலை வழங்க வேண்டுமெனவும் அவர் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .