Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2015 மார்ச் 25 , பி.ப. 12:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை(27) யாழ்ப்பாணத்துக்கு விஜயம்செய்யவுள்ளதுடன் பல்வேறு நிகழவுகளிலும் கலந்துகொள்ளவுள்ளதாக பிரதமர் செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர், முதலில் யாழ்.நாகவிகாரைக்கு செல்லவுள்ளதுடன் பின்னர் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறவுள்ள, கர்ப்பிணிகளுக்கு 2,000 ரூபாய் வழங்கும் நிகழ்விலும் கலந்துகொள்வார்.
அத்துடன் யாழ்.மாவட்டச் செயலகத்தில் மாவட்ட, பிரதேச செயலாளர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளும் அவர், பின்னர் பெண் தலைமைத்துவ குடும்பங்கள், புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள், மீள்குடியேறிய மக்கள், மீனவர் சங்கப் பிரதிநிதிகள் ஆகியோரையும் சந்திக்கவுள்ளார்.
நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் அடிகளார், முஸ்லிம் பிரதிநிதிகளையும் இதன்போது பிரதமர் சந்திக்கவுள்ளார்.
மறுநாள் 28 ஆம் திகதி நெடுந்தீவுக்குச் செல்லும் அவர், நயினாதீவு நாகதீப விகாரையில் வழிபாடுகளை மேற்கொள்வார்.
தொடர்ந்து பலாலியில் இராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றின் உயர் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். அத்துடன், பிரதமரது யாழ்.விஜயம் முடிவுக்கு வருகின்றது.
மறுநாள் 29 ஆம் திகதி கிளிநொச்சி மாவட்டத்துக்குச் செல்லும் பிரதமர் அங்கும் நிகழ்வுகளில் கலந்துகொள்வதுடன், பல சந்திப்புக்களையும் மேற்கொள்ளவுள்ளார்.
3 hours ago
9 hours ago
17 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago
17 Aug 2025