Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2015 மார்ச் 25 , பி.ப. 12:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சொர்ணகுமார் சொரூபன்
யாழ்ப்பாணம் மாவட்ட பாடசாலைகளில் தொண்டர் ஆசிரியர்களாக பணியாற்றுபவர்கள் தங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கக்கோரி வடமாகாண கல்வி அமைச்சின் அலுவலகம் முன்பாக புதன்கிழமை(25) ஆர்;ப்பாட்டம் செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 100 தொண்டர் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். அவர்கள் கருத்துக்கூறுகையில்,
தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றியவர்களுக்கான நியமனம் கடந்த 2009ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. அந்த நியமனத்தின் போது, 52 தொண்டர் ஆசிரியர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை.
காலப்போக்கில் தொண்டர் ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகரித்து தற்போது சுமார் 350 தொண்டர் ஆசிரியர்கள் உள்ளனர். அனைவருக்குமான நிரந்தர நியமனத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு பதிலளித்த வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா,
தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கும் அதிகாரம் மத்திய அரசுக்கே உள்ளது. மத்திய அரசுடன் இது தொடர்பில் கலந்துரையாடி வருகின்றோம். வடமாகாணத்தில் அதிகளவான தொண்டர் ஆசிரியர்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்குமான நிரந்தர நியமனம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்போம். விரைவில் சாதகமான பதிலைப் பெற்றுத்தருவோம் என்று கூறினார்.
அமைச்சரின் உறுதிமொழியைத் தொடர்ந்து, தொண்டர் ஆசிரியர்கள் தமது ஆர்ப்பாட்டத்தை கைவிட்டுச் சென்றனர்.
3 hours ago
9 hours ago
17 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago
17 Aug 2025