2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

இராணுவ சிப்பாய்க்கு மரண தண்டனை

Thipaan   / 2015 மே 09 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

கொடிகாமம், கச்சாய் பகுதியில் நிலைகொண்டிருந்த 11 ஆவது கஜபா படைப்பிரிவில் லெப்டினன் தர அதிகாரி ஒருவரை சுட்டுக்கொலை செய்த இராணுவ சிப்பாய்க்கு, யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி கனகா சிவபாசுந்தரம், வெள்ளிக்கிழமை (08) மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

பொலிஸ் மற்றும் இராணுவ சாட்சி உட்பட 14 சாட்சிபத்திரங்களை கொடிகாமம் பொலிஸார், சந்தேக நபருக்கு எதிராக தாக்கல் செய்திருந்தனர்.

வெள்ளிக்கிழமை (08) வழக்கு விசாரணையின் போது, சட்ட வைத்திய அதகாரியின் மருத்துவ சாட்சி அறிக்கை, நேரில் கண்ட சாட்சியங்கள் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

2001ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் திகதி கொடிகாமம் கச்சாய் பகுதியில் நிலைகொண்டிருந்த 11ஆவது கஜபா இராணு முகாமில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் லெப்டினன் துஸார மகேஸ் விக்கிரமசிங்க (வயது 29) என்ற கனிஸ்ட நிலை அதிகாரி கொல்லப்பட்டிருந்தார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட கொடிகாமம் பொலிஸார், அதே முகாமில் கடமையாற்றிய புத்தளம் பகுதியினை சேர்ந்த டி.எம்.பிரியந்த திசாநாயக்க (வயது 39) என்ற சிப்பாயை கைது செய்திருந்தனர்.

மேற்படி வழக்கு விசாரணைகள்  சாவகச்சேரி நீதிமன்றில் இடம்பெற்று வந்த நிலையில், மேலதிக விசாரணைகளுக்காக கடந்த 2012 செப்டெம்பர் மாதம் 10ஆம் திகதி யாழ். மேல் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

மேலதிக விசாரணைகள் அனைத்தும் முடிவுற்ற நிலையில் நீதிபதி மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .