2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

இராணுவ வாகனம் மோதி வயோதிபர் காயம்; சாரதி கைது

George   / 2015 மே 13 , மு.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ்ப்பாணம் மல்லாகம் சந்திக்கு அண்மையில் செவ்வாய்க்கிழமை (12) மாலை துவிச்சக்கரவண்டியில் சென்ற வயோதிபரை, இராணுவ வாகனம் மோதியுள்ளது.

இதனால் படுகாயமடைந்த முதியவர், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தப்பியோடிய வாகனத்தையும், அதன் சாரதியையும் கைது செய்துள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர்.

அளவெட்டி கணேசபுரத்தைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை பாலசுந்தரம் (வயது 54) என்பவரே இந்தவிபத்தில் படுகாயமடைந்துள்ளார்.

இதேவேளை, வயோதிபரை மோதிய இராணுவ வாகனம் நிற்காமல் தப்பிச் சென்றதையடுத்து இந்த விபத்துப்பற்றி தெல்லிப்பழை பொலிஸாருக்கு பொதுமக்கள் அறிவித்துள்ளனர்.

தெல்லிப்பழை பொலிஸார், மாவிட்டபுரம் சோதனை நிலையத்துக்கு தகவல் வழங்கியதையடுத்து, சோதனைச் சாவடியில் வைத்து, இராணுவப் பொலிஸாரால் சாரதி கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெல்லிப்பழை பொலிஸார் கூறினர்.

இந்த விபத்தில் காயம் அடைந்தவருடைய உடைமையிலிருந்த வங்கி அடைவு பற்றுச்சீட்டின் மூலம் கணேசபுரம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .