2021 நவம்பர் 29, திங்கட்கிழமை

1000 பாடசாலைகள் திட்டத்தில் புத்தளம் மாவட்டத்திலிருந்து 5 தமிழ் மூல பாடசாலைகள்

Kogilavani   / 2011 ஏப்ரல் 06 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் விஷேடாமக தெரிவு செய்யப்பட்ட 1000 பாடசாலைகளில் புத்தளம் மாவட்டத்திலிருந்து 5 தமிழ் மூலப் பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

புத்தளம் பாத்திமா மகளிர் கல்லூரி, புத்தளம் இந்துக் கல்லூரி,  கடையாமோட்டை மு.ம.வி,  திகழி மு.ம.வி,  பள்ளிவாசல்துறை மு.ம.வி,  ஆகிய பாடசாலைகளே இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளாகும்.

வடமேல்மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எச்.எம்.ரியாஸ், என்டி.எம்.தாஹிர், எஸ்.ஏ.எஹியா ஆகியோரின் முயற்சியினால் இப்  பாடசாலைகள் 1000 பாடசாலைகளுக்குள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகள் ஒவ்வொன்றுக்கும் 6 வருட கால அபிவிருத்திக்கென 6 கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்படவுள்ளன.

அத்துடன் அந்த பாடசாலைகளில் நவீன வசதிகளுடன் கூடிய வாசிகசாலை, விஞ்ஞான ஆய்வு கூடம், விளையாட்டு மைதானம்,  கணணி கூடம் என்பனவும் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .