2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

சுவாமி விவேகானந்தரின் 150வது தினத்தை முன்னிட்டு விசேட நிகழ்வு

Kogilavani   / 2012 ஒக்டோபர் 13 , மு.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

உடப்பு, ஸ்வயம் சேவா சங்கம் ஏற்பாடு செய்திருந்த சுவாமி விவேகானந்தரின் 150வது ஜனன தினத்தையொட்டிய விசேட நிகழ்வு நேற்று உடப்பு, இந்து கலாசார மண்டபத்தில் நடைப்பெற்றது.

ஆரம்ப நிகழ்வாக சிறுவர்களின் ஊர்வலமானது உடப்பு, இந்து கலாசார மண்டபத்திற்கு அருகில் ஆரம்பமாகி ஸ்ரீ வீரபத்திர காளியம்மன் ஆலயத்திற்கூடாக மீண்டும் இந்து கலாசார மண்டபத்தினை வந்தடைந்தது.

இந்நிகழ்வில் நாவல, திறந்த பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் வ.சிவலோகதாசன், பொறியியலாளர் முருகேசன் பிள்ளை உட்பட பலர் சிறப்புரை ஆற்றினர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X