2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

10 பாடசாலைகள் அபிவிருத்தி

Kogilavani   / 2013 ஜனவரி 26 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். சீ. சபூர்தீன்

வடமத்திய மாகாணத்தில் உயர்தர விஞ்ஞான, கணித பிரிவுகள் மற்றும் வெளிநாட்டு மொழிகளைக் கற்கக்கூடிய 10 பாடசாலைகள் இவ்வருடத்தினுள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

மாவட்டத்தில் மேற்படி துறைகளில் அதிகளவிலான பட்டதாரிகளை உருவாக்கும் நோக்கிலேயே இச்செயற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக வடமத்திய மாகாண கல்வி அமைச்சர் பேஷல ஜயரத்ன தெரிவித்தார்.

அபிவிருத்தி செய்யப்படவுள்ள பாடசாலைகள் நகரப் பகுதியில் அல்லாது கஷ்டப் பிரதேசங்களிலேயே தெரிவு செய்யப்படவுள்ளன.

தெரிவு செய்யப்படும் பாடசாலைகளுக்கு தேவையான ஆசிரியர்கள் மற்றும் சகல வளங்களையும் வழங்க நடவடிக்ககை எடுக்கப்படும்.

விஞ்ஞான, கணித, தொழில்நுட்ப பிரிவுகளுடன் சீன, ஜப்பான் மற்றும் ஜேர்மனி மொழிகளைக் கற்கவும் சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது எனவும் மாகாண அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X