2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

ஒன்றரை வயது குழந்தையுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 12 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


தம்புள்ளை, யாபாகம பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது ஒன்றரை வயது குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார் என பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

இச்சம்பவம் இன்று புதன்கிழமை முற்பகல் 10.55 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 38 வயதான பெண்ணொருவரும் அவரது குழந்தையுமே உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்த பெண், மன நோயால் பாதிக்கப்பட்டவர் என பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இருவரதும் சடலங்கள் தம்புள்ளை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலதிக விசாரணைகளை தம்புள்ளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறினார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X