2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

சகல வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கும் வேலைத்திட்டம்

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 16 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சீ.சபூர்தீன்)

அடுத்த வருடம் பூர்த்தியாவதற்குள் வடமத்திய மாகாணத்திலுள்ள சகல வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கும் பாரிய வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக வடமத்திய மாகாண முதலமைச்சர் ரஞ்சித் சமரகோன் தெரிவித்தார்.

ஜனாதிபதி பதவி ஏற்கும்போது வடமத்திய மாகாணத்தில் 35 - 40 வீதமான கிராமங்களுக்கே மின்சாரம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் தற்பொழுது 98 வீதமாகக் காணப்படுகிறது.

இதேவேளை அடுத்த வருடத்தின் ஆரம்ப பகுதியில்  பொலன்னறுவை மாவட்டத்திலுள்ள சகல கிராமங்களுக்கும் மின்சாரத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும்  தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X