Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 26 , மு.ப. 06:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஞ்சி பிஸ்கட் நிறுவனம், சீனாவில் அண்மையில் இடம்பெற்ற Asia Marketing Excellence விருது வழங்கும் விழாவில் ‘2018 ஆம் ஆண்டுக்கான ஆசியாவின் மிக சிறந்த சந்தைப்படுத்தல் நிறுவனமாக’ தெரிவு செய்யப்பட்டிருந்தது.
இலங்கையின் நிறுவனம் ஒன்று முதல் முறையாக இவ்விருதை வென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. Asia Marketing Excellence விருதுகள், ஆசியாவின் சந்தைப்படுத்தல் துறையின் முன்னணி கண்காணிப்பு நிறுவனமான Asia Marketing Excellence Federation (AMF) யினால் சந்தைப்படுத்தல் துறையில் ஏனையவர்களைவிட பல மடங்கு முன்னணியில் நிற்கும் நிறுவனங்களுக்குப் வழங்கும் ஒரு விருதாகும்.
இறுதிச் சுற்றுக்கு முன்னர் ஒவ்வொரு நாட்டினதும் தேசிய சந்தைப்படுத்தல் நிறுவனத்தினால் கடுமையான மதிப்பீடுகளின் மூலம் ஒரு தேசிய வெற்றியாளர் தெரிவு செய்யப்பட வேண்டியுள்ளது. இந்த அடிப்படையில் இலங்கையைப் பொறுத்த வரையில் இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனம் இந்த மதிப்பீட்டை மேற்கொண்டது. அது, 2018ஆம் ஆண்டின் சந்தைப்படுத்தல் 3.0க்கான தேசிய வெற்றியாளராகவும் 2018ஆம் ஆண்டின் தேசிய சந்தைப்படுத்தல் கம்பனியாகவும் மஞ்சியை தெரிவு செய்திருந்தது.
16 நாடுகளின் முன்னணி நிறுவனங்களுடன் போட்டியிட்டு, கடினமான நேர்காணல் படிமுறைகளின் பின்னர் Asia Marketing Excellence விருதுகளின் போது 2018 ஆம் ஆண்டின் Asia Marketing கம்பனியாக AMF மஞ்சிக்கு விருது வழங்கியது.
1991ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட AMF, முன்னர் Asia Pacific Marketing Federation எனவும், 2007 ஆம் ஆண்டு முதல் Asia Marketing Federation எனவும் அழைக்கப்பட்டது. சந்தைப்படுத்தல் துறையில் AMF மூன்று தசாப்தங்களை அண்மித்த காலமாக, ஆசியாவில் மிகச் சிறந்த பணியை ஆற்றி வந்துள்ளது. ஆசியாக் கண்டத்தின் சந்தைப்படுத்தல் துறையில் சக்திமிக்க நிலையை ஏற்படுத்துவதற்கும் அது நடவடிக்கை மேற்கொண்டது.
AMF ஆசிய வலயத்தில் பெருந்தொகையான அங்கத்தவர்களைக் கொண்டுள்ளது. இதில் பங்களாதேஷ், கம்போடியா, சீனா, ஹொங்கொங், இந்தோனேசியா, ஜப்பான், கொரியா, மலேசியா, மொங்கோலியா, மியன்மார், பிலிப்பீன்ஸ், சிங்கப்பூர், இலங்கை, தாய்வான், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளும் அடங்கும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago