Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 நவம்பர் 16 , மு.ப. 09:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
BMW ஆசியா, Prestige Automobile பிரைவட் லிமிட்டெட் ஆகியன இணைந்து, இலங்கையில் முதலாவது BMW 6 Series Gran Turismo (GT) ரக கார்களை அறிமுகம் செய்துள்ளன. நீண்ட தூரம் பயணிப்பதற்கான சௌகரியம், சிறந்த தோற்ற அமைப்பு போன்றவற்றை இவை கொண்டுள்ளன. கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் அண்மையில் நடைபெற்ற வைபவமொன்றில் இந்த அறிமுகம் இடம்பெற்றது.
புதிய BMW 6 GT இனால் உயர்மட்ட வாகன செலுத்துகைக்குச் சௌகரியம் சேர்க்கப்படுவதுடன், அதிகளவு இடவசதி, ‘ஸ்போர்டி’ தோற்றமும் சேர்க்கப்படுகிறது. உயர்திறன் வாய்ந்த சாதனங்கள், புத்தாக்கமான கட்டுப்படுத்தல், உதவிக் கட்டமைப்புகள், சிறந்த பயணத்துக்கு அவசியமான வினைத்திறனைச் சேர்ப்பதாக அமைந்துள்ளது.
இந்த அறிமுகம் தொடர்பாக, Prestige Automobile பிரைவட் லிமிட்டெட் விற்பனைப் பிரிவின் பணிப்பாளர் நிரங்க பீரிஸ் கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையில் BMW வாகனங்களை விநியோகிப்பதற்கான ஏக முகவராகச் செயற்படும் நாம், உள்நாட்டுச் சந்தையில் நவீன BMW 6 Series GT மாதிரிக் கார்களை அறிமுகம் செய்வதையிட்டு மிகவும் பெருமை கொள்கிறோம். புதிய மாதிரி, நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளதுடன், BMWஇன் மோட்டார் திறனை சேர்த்து, வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த அனுபவத்தைச் சேர்ப்பதாக அமைந்துள்ளது. மேலும், ஒவ்வொரு BMW உம் தனது சீரான மட்டத்தில் இயங்குவதை உறுதி செய்வதற்காக, நாம் ஏக முகவர் எனும் வகையில், நவீன விற்பனைக்குப் பிந்திய, விபத்து பழுதுபார்ப்பு நிலையைத்தை கொண்டுள்ளோம்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
11 minute ago
23 minute ago
46 minute ago