Janu / 2024 மே 22 , பி.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

உலகளாவிய தேடப்படும் ரோட்டரி நிகழ்வு என்பது நெட்வொர்க்கிங் மற்றும் கற்றல் வருடாந்த ஒன்று கூடல் நிகழ்வாகும் .2024 மாநாடு,உலகெங்கிலுமுள்ள இருபத்தையாயிரம் ரோட்டரி உறுப்பினர்களை அழகான சிங்கப்பூருக்கு ஈர்க்கும் நிகழ்வாகும் .சிலர் இதனை சிறு ஐக்கிய நாடுகள் சபை என்றும் விவரிக்கிறார்கள் .
இது சர்வதேச எதிர்பார்ப்புகளையும் கலாச்சார பன்முகத்தன்மைக்கான அர்ப்பணிப்பையும் கொடுக்கிறது .அங்கு உலகத்தலைவர்கள் ஒன்றுகூடி உலகம் சந்திக்கும் சவால்களுக்கு தீர்வுகளை கண்டறிகின்றனர் .
வருடாந்த மாநாட்டில் நடைபெறவுள்ள ரோட்டரி அறக்கட்டளை நன்கொடையாளர் உச்சி மாநாட்டில் பேச்சாளராக இலங்கை மற்றும் மாலைதீவு றோட்டரிக்கான இலங்கையின் முதல் பெண் ஆளுநர் தெரிவு செய்யப்பட்டுள்ளார் .சர்வதேச ரோட்டரி தலைவர் கோர்டன் மேக்கினலி இந்த ஆண்டை " உலகுடன் நம்பிக்கையை உருவாக்கு "என்கிற கருப்பொருளை கூறியுள்ளார் .
செல்வி கௌரி ராஜன் அவர்கள் ஒரு விருது பெற்ற வணிக நிபுணராக கண்டி குண்டசாலையை தளமாக கொண்ட சன் மேட்ச் நிறுவனத்தின் இயக்குனராக உள்ளார் .இது பாதுகாப்பான தீப்பெட்டி பிரிவில் சந்தையில் முன்னணியில் உள்ளது .மற்றும் பலதரப்பட்ட கூட்டு நிறுவனமாக உள்ளது .
இந்த மாநாடு மே 25 முதல் 29 வரை மெரினா பே சாண்ட்ஸ் எக்ஸ்போ கன்வென்ஷன் சென்டரில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது .
இந்த பதிப்பில் தனித்துவமான உலகத்தரம் வாய்ந்த பேச்சாளர்கள் தனித்துவமான சிறந்த உணவு அனுபவங்கள் மற்றும் உலகின் அதிநவீன மனிதாபிமான பிரச்சினைகளில் பன்முகத்தன்மை போன்றவை நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டுள்ளது .
7 minute ago
19 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
19 minute ago
26 minute ago