Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2017 மார்ச் 06 , பி.ப. 06:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஷன்ஸென் ஒடேடா நிறுவனதுக்குச் சொந்தமான LEAGOO திறன்பேசிகள், 2014ஆம் ஆண்டு உலக தொலைத்தொடர்பு சந்தைக்கு முதன் முதலில் அறிமுகம் செய்யப்பட்டது. மனித வாழ்க்கையை இலக்காகக் கொண்ட கொள்கைக்கு அமைவான தொழில்நுட்பத்தையும், நவீனத்துவத்தையும் அடிப்படையாகக் கொண்டு இயங்கும் LEAGOO திறன்பேசிகள் “Jest for Excellent Smart life” என்ற பாணியில் தன்னை நிலைநிறுத்தி மதிநுட்பமான வாழ்வுக்கு மேலதிகமானதொரு நன்மையைத் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் 50க்கும் அதிகமான நாடுகளில் LEAGOO அலைபேசிகள் விற்பனை செய்யப்படுகின்றன. 2016ஆம் ஆண்டில் நடந்த மொபைல் நிவ் ஃபோர்ஸ் மாநாட்டில் தனது போட்டி கையடக்கத் தொலைபேசிகளை பின்தள்ளி LEAGOO அலைபேசிகள் சீனாவின் மிகச்சிறந்த அலைபேசியாகவும், வெளிநாடுகளில் அதிகம் விற்பனை செய்யப்படும் உள்நாட்டு தொலைபேசி என்ற பெருமையையும் தனதாக்கிக்கொண்டது.
LEAGOO அலைபேசிகள் இலங்கையில் அறிமுகம் செய்யப்படுவது இலங்கை கையடக்கத் தொலைபேசி பிரியர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் புதுவித அனுபவமாக அமையும் என நிறுவனம் அறிவித்துள்ளது. ஒவ்வொருவரும் தத்தம் விருப்பத்திற்கு ஏற்றவாறு தெரிவுசெய்யக்கூடிய பல்வேறு வடிவங்களினால் LEAGOO அலைபேசிகள் அணிவகுக்கப்பட்டுள்ளன.
மலேசியா, மியன்மார், இந்தோனேசியா, மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுடன் உலகளாவிய ரீதியில் பரந்து விரிந்த விநியோக வலையமைப்பைக் கொண்டுள்ள சிங்கப்பூரின் பாவ்னா குழுமத்துக்கு சொந்தமான விநியோக நிறுவனமான, நச்சுரல் வோண்டர்ஸ் தனியார் நிறுவனமே LEAGOO அலைபேசிகளின் இலங்கைக்கான விநியோகஸ்தர் ஆகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .