Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 பெப்ரவரி 10 , மு.ப. 04:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
LMD சஞ்சிகையால் வெளியிடப்பட்ட முதலாவது பெருநிறுவன மகிழ்ச்சி சுட்டெண் (CHI) இல் இலங்கையின் வங்கிகளில் கொமர்ஷல் வங்கி முதலாம் இடத்தைப் பெற்றுள்ளது.
இதனைத் தவிர மேலும் இந்த முன்னோடி முயற்சிக்காக PepperCube ஆலோசகர்களால் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் எதிர்பார்க்கப்பட்ட 16 பண்புக்கூறுகளில் வங்கி பதிவு செய்துள்ள உயர் நிலைகளைத் தொடர்ந்து, இலங்கையின் 'மகிழ்ச்சிகரமான இரண்டாவது வீடுகளில்' ஒன்றாகவும் தரவரிசையில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.
இதே வேளை கொமர்ஷல் வங்கியானது 16 பண்புக்கூறுகளில் 14 இல் மிக உயர்ந்த தரவரிசைப் பெற்ற வங்கியாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. ஊழியர்கள் தொடர்பான அடிப்படையான மற்றும் முக்கியமான பல அம்சங்களில் வங்கித் துறையானது திருப்திகரமான நிலையை பதிவு செய்திருந்தது. இதற்கிணங்க 'ஊதிய அளவுகள்,' 'வெகுமதிகள் மற்றும் சலுகைகள்,' 'தொழில் முன்னேற்றம்,' 'பணிச் சூழல்,' 'பாலின சமநிலை,' 'சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு,' 'தொழில் வாழ்க்கை சமநிலை,' 'பணியிட பன்முகத்தன்மை,' மற்றும் 'பணியிட நெகிழ்வுத்தன்மை போன்ற அம்சங்களில் உயர் நிலையை அவதானிக்க கூடியதாக இருந்தது.
அது மட்டுமன்றி கொமர்ஷல் வங்கியானது 'நிதியியல் ஸ்திரத்தன்மை,' 'பெருநிறுவன தலைமைத்துவம்,' 'பணியிட தோழமை,' 'திறந்த கலாசாரம்' மற்றும் 'பொழுதுபோக்கு வசதிகள்' ஆகியவற்றிற்காக, வங்கித் துறையில் முதலிடத்தைப் பெற்றது.
வங்கித் துறையில் அதன் உறுதியான தலைமைத்துவத்திற்கு மேலதிகமாக, LMD நிறுவன மகிழ்ச்சி சுட்டெண் அனைத்து துறைகளிலும் இலங்கையின் முதல் ஐந்து பெரு நிறுவனங்களில் கொமர்ஷல் வங்கியை தரவரிசைப்படுத்தியுள்ளது, இதற்கிணங்க 16 பண்பு தரவரிசைகளில் 10 இல், மற்றும் ஒட்டுமொத்த முதல் பத்து இடங்களில், பண்புக்கூறுகளில் 15 இல் என தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
'நிதியியல் ஸ்திரத்தன்மை' மற்றும் 'பணியிட நட்புறவு' ஆகிய பண்புகளுக்காக வங்கி ஒட்டுமொத்தமாக இரண்டாவது இடத்தையும், 'தொழில் முன்னேற்றத்திற்காக' மூன்றாவது இடத்தையும், 'பணியிட பன்முகத்தன்மை' மற்றும் 'பணியிட நெகிழ்வுத்தன்மைக்காக' இலங்கையில் நான்காவது இடத்தையும் பிடித்தது.
'இன்றைய வேகமான பெருநிறுவன சூழலில் பணியிட மகிழ்ச்சியின் முக்கியத்துவத்தை மிகைப்படுத்த முடியாது, மேலும் பணியிட நல்வாழ்வு பற்றிய புரிதலை மறுவரையறை செய்வதற்கும் இந்த துறையில் நிறுவனங்களின் முன்னேற்றத்தை தரவரிசைப்படுத்துவதற்கும் LMD இதழின் இந்த அற்புதமான முயற்சியை நாங்கள் வரவேற்கிறோம்' என்று கொமர்ஷல் வங்கியின் நிர்வாக இயக்குனரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சனத் மனதுங்க தெரிவித்தார். கொமர்ஷல் வங்கியில், ஊழியர்கள் தமது வாழ்க்கையை கட்டியெழுப்பும்போது அவர்களின் முழு திறனை அடைய முடியும் என்பதை உறுதிப்படுத்தும் பணியிட கலாசாரத்தை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. எங்களின் மிகப் பெரிய பலம் நமது மக்களே, மேலும் வேலை தொடர்பான மன அழுத்தத்தைக் குறைப்பது உட்பட, அவர்களின் நல்வாழ்வில் தீவிர கவனம் செலுத்தப்படுகிறது, ஏனெனில் இவ்வாறான மன அழுத்தமானது ஊழியர்களின் ஆரோக்கியத்தையும் நிறுவனத்தின் உற்பத்தித்திறனையும் எதிர்மறையாக பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
10 minute ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
2 hours ago
5 hours ago