Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஓகஸ்ட் 30 , மு.ப. 03:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் முன்னணி புத்துணர்வு பால் உற்பத்தி வர்த்தக நாமமாக விளங்கும் டெய்லி தமது சேவையில் 20 வருடங்களை பெருமிதத்துடன் கொண்டாடியது. குளிர்சாதன வசதியின்றியும் பாலின் புத்துணர்வை பேணும் வகையில் அல்ட்ரா ஹுட் ட்ரீட்மன்ட் UHT (Ultra Heat Treatment) வகையிலான உற்பத்தியை இலங்கையில் அறிமுகப்படுத்திய பெருமை இந்நிறுவனத்தையே சாருகின்றது.
பல்வேறு சுவைகளை கொண்ட டெய்லி புத்துணர்வு பால் உற்பத்திகளை மேற்கொள்ளும் லங்கா மில்க் பூட்ஸ் நிறுவனத்தின் (CWE) உப நிறுவனமான லங்கா டெய்ரீஸ் தனியார் நிறுவனம் 1996ஆம் ஆண்டு ஜுலை மாதம் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டது. முதலில் வெனிலா மற்றும் சொக்கலட் சுவைகளிலும் பின்னர் ஸ்ரோபரி மற்றும் வாழைப்பழம் சுவைகளிலும் அறிமுகமானதுடன், ஐஸ் கோப்பி மற்றும் பளுடா சுவைகளிலும் வெளிவந்தன. அதிக சுவையுடன் கூடிய புத்துணர்வான பால் உற்பத்திகளை இலங்கையர்களுக்கு வழங்க வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.
கொள்வனவு செய்தவுடன் பருகக்கூடிய (Ready to drink) வகையைச் சேர்ந்த உற்பத்திகளை மக்களுக்கு அதிகம் வழங்குவது டெய்லி ஆகும். ஏனைய உற்பத்திகளுடன் ஒப்பிடுகையில் பாவனையாளர்களுக்கு மேலதிகமாக 20 மில்லிலீற்றர் தருவதும் இந்த உற்பத்தி என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன், குடும்பத்தவரின் தேவை கருதி ஒரு லீற்றர் பெமலி பெக் ஒன்றும் உற்பத்தி செய்யப்பட்டது.
தாய் நிறுவனத்தின் செயற்பாடுகளுக்கான பணிப்பாளர் கே.எல்.டபிள்யூ.ஹரிஸ்சந்திர கருத்து தெரிவிக்கையில்,'லங்கா டெய்ரீஸ் தனியார் நிறுவனம் பல நடவடிக்கைகளை ஆராய்ந்தப் பின்னரே இத்தகைய உற்பத்தியில் ஈடுபட்டடது' என்றார்.
இலங்கையில் டெய்லி அறிமுகப்படுத்திய காலத்தில் 10% வீடுகளுக்கே குளிர்சாதன வசதிகள் இருந்தன. குளிர்சாதனப்பெட்டி இருந்த கடைகளும் கொழும்பு உள்ளிட்ட நகரப் பகுதிகளுக்கு மட்டுப்பட்டிருந்தன. அவ்வாறு குளிர்சாதன பெட்டிகளை கொண்ட கடைகளில் கூட பால் உணவை பேணுவதற்கான உரிய வெப்ப அளவு பேணப்பட்டதாக கூற முடியாது. அதனால் பாவனையாளர்களுக்கு கிடைத்த பாலின் புத்துணர்வு மற்றும் சுகாதாரம் தொடர்பாக கேள்வி நிலவியது. புத்துணர்வான பாலை களஞ்சியப்படுத்துதல் மற்றும் போக்குவரத்து செய்வதிலும் பிரச்சினைகள் இருந்தன. ஆரோக்கியமான மக்களை உருவாக்க நாடு முழுவதும்
போஷாக்கான பாலை விநியோகிப்பதே எமது இலக்காக இருந்தது. அதற்கமைய நாம் குளிர்சாதன வசதியின்றி, புத்துணர்வை பேணும் வகையில் (UHT) அல்ட்ரா ஹுட் ட்ரீட்மன் தொழில்நுட்பம் மற்றும் எசப்டிக் பொதியிடல் கொண்ட கைத்தொழிலுக்காக முதலீடு செய்தோம். அத்தகைய உற்பத்திசாலை ஒன்றை இலங்கையில் முதலில் நாமே ஆரம்பித்தோம்.
அதன்மூலம் ஆறு மாதத்துக்கு குளிர்சாதனப்பெட்டியில் வைக்காமல் உடனடியாக பருகக்கூடிய பால் உற்பத்தி அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்மூலம், எசப்டிக் பொதியிடல் முறைமை ஊடாக பாலின் புத்துணர்வை பேணவும் குணத்தை பாதுகாக்கவும் முடியும். அத்துடன், சுகாதார முறையிலேயே பாலை பருகும் ஸ்ரோவும் தயாரிக்கப்பட்டது. அதற்கமைய, சந்தையில் வாங்கியவுடன் பருகக்கூடிய பாலாக டெய்லி உள்ளதை கூறலாம்.
20 வருடங்கள் பூர்த்தியை கொண்டாடும் நிகழ்வு நீர்கொழும்பு ஹெரிடன்ஸ் ஹோட்டலில் நிறுவனத்தின் தலைவர் ஹரி ஜெயவர்தன தலைமையில் மிகவும் பிரமாண்டமாக அண்மையில் கொண்டாடப்பட்டது. இதன்போது, சுமார் 20 வருடங்களை சேவையாற்றும் பல்துறைசார்ந்த ஊழியர்கள் மற்றும் விற்பனை பிரதிநிதிகளுக்கும் நினைவுசின்னங்கள், பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
42 minute ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
4 hours ago
5 hours ago
5 hours ago