Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 நவம்பர் 16 , மு.ப. 03:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவு மாவட்டத்தில் நான்கு பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 130 மாணவர்களுக்கு நன்மை அளிக்கும் வகையில் கணிதப்பாட ஆதரவுத் திட்டம் ஒன்றை கொமர்ஷல் வங்கி அண்மையில் சஸ்னக சன்சத மன்றத்தின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்தது.
கல்வியை மையப்படுத்திய வங்கியின் கூட்டாண்மை சமூகப் பொறுப்புத் திட்டத்தின் கீழ் இரண்டு வதிவிடத் திட்டங்களாக இவை முன்னெடுக்கப்பட்டன. ‘சஸ்னக சன்சத கணித சவிய’ எனும் தொனிப் பொருளில் இந்நிகழ்ச்சி இடம்பெற்றது. கல்வி அமைச்சின் பாடபோதனை அத்தியாவசிய எண்ணக்கருவின் கீழ் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கணித ஆசிரியர்கள் மிகவும் குறைவாகக் காணப்பட்ட சம்பத் நுவர தேசிய பாடசாலை, கல்யாணிபுர வித்தியாலயம், பரணகமவௌ வித்தியாலயம், எஹதுகஸ்வௌ வித்தியாலயம் என்பன இந்த ஆதரவுத் திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்ட பாடசாலைகளுள் சிலவாகும்.
கல்வி அமைச்சின் கணிதப் பிரிவின் வேண்டுகோளின் பேரில், இந்த நிகழ்ச்சி இடம்பெற்றது. மாணவர்களின் அடைவு மட்டத்தை மேம்படுத்துவதும் அவர்களுக்கு உற்சாகமளிப்பதும் இந்தத் திட்டத்தின் பிரதான நோக்கங்களாகும்.
இதன் மூலம் இந்தப் பாடசாலைகளின் பெறுபேறு விகிதத்தை அதிகரிப்பதே இதன் குறிக்கோளாகும். தற்போது இந்தப் பாடசாலைகளில் க.பொ.த சாதாரண தர மாணவர்கள் பரீட்சைகளில் தோல்வி அடையும் விகிதம் 80 வீதமாக உள்ளது. கொமர்ஷல் வங்கி 2015இல் கணித ஆய்வுகூட திட்டத்தை அறிமுகம் செய்தது. இலங்கையில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் கணித அறிவை மேம்படுத்தி அவர்கள் மத்தியில் மதிப்பீட்டு ஆற்றலை வளர்ப்பதும் இதன் முக்கிய திட்டமாகும்.
பஸரை மீயனகந்துர அரசாங்க பாடசாலையில் முன்னோடியாக அறிமுகம் செய்யப்பட்ட கணித ஆய்வுகூடத் திட்டம் முன்னாள் ஆசிரியரும் ஆக்கபூர்வ கற்றல் உபகரணங்களின் வடிவமைப்பாளருமான ஹென்கொடகே தர்மசிறியால் உருவாக்கப்பட்டதாகும். பலரையும் கவர்ந்துள்ள கொமர்ஷல் வங்கியின் இந்த முன்னோடித் திட்டத்தால் இதுவரை நாடு முழுவதும் சுமார் 5000 மாணவர்கள் நன்மை அடைந்துள்ளனர்.
1 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago