2026 மே 07, வியாழக்கிழமை

ரஜீவ் டேவிட்டுக்கு 'சிறந்த சந்தைப்படுத்தல் நிபுணர்' விருது

Gavitha   / 2016 ஓகஸ்ட் 21 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

யூனியன் வங்கியின் சந்தைப்படுத்தல் முகாமையாளர், ரஜீவ் டேவிட்டுக்கு 'ஆண்டின் யூனியன் வங்கியின் சந்தைப்படுத்தல் முகாமையாளர், ரஜீவ் டேவிட்டுக்கு 'ஆண்டின் சிறந்த சந்தைப்படுத்தல் நிபுணர்' கௌரவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் அண்மையில் நடைபெற்ற சந்தைப்படுத்தல் மற்றும் வர்த்தக நாமங்கள் தொடர்பான 7ஆவது CMO ஆசியா விருதுகள் வழங்கும் வைபவத்தில் இந்த விருது வழங்கப்பட்டிருந்தது.  

இந்த ஆண்டு, இந்த விருதை பெற்றுக் கொண்ட ஒரே இலங்கையர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்தச் சந்தைப்படுத்தல் நிபுணர்களும் தத்தமது நாடுகளுக்கான விருதுகளைப் பெற்றிருந்ததன் மூலம் இவருடன் இணைந்து கொண்டனர்.  

வர்த்தக நாமம் மற்றும் சந்தைப்படுத்தல் துறையில் மாற்றத்தை ஏற்படுத்தியிருந்ததுடன், 12 வருட கால அனுபவத்தைக் கொண்ட நிபுணத்துவம் வாய்ந்த சந்தைப்படுத்தல் வல்லுநராக ரஜீவ் டேவிட் திகழ்கிறார். கொழும்பு புனித. பேதுருகல்லூரியில் தனது பாடசாலைக் கல்வியைப் பூர்த்தி செய்த ரஜீவ், CIM-UK இல் சந்தைப்படுத்தலுக்கான பட்டயப் பட்டப்பின் படிப்பு டிப்ளோமாவை பூர்த்தி செய்திருந்தார்.  CMA அவுஸ்திரேலியாவில் பட்டய முகாமைத்துவக் கணக்கியல் மற்றும் வியாபார முகாமைத்துவத்தில் முதுமானிப்பட்டத்தையும் இந்தியாவின் சிக்கிம் மனிபால் பல்கலைக்கழகத்தில் பெற்றுள்ளார்.

வௌ;வேறு துறைகளில் பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டுள்ள ரஜீவ், 8 வருட காலம் காப்புறுதித்துறையில் பணியாற்றியுள்ளார். பல புத்தாக்கமான திட்டங்களை வடிவமைத்து, முன்னெடுப்பதில் இவர் முன்னோடியாக திகழ்ந்திருந்தார். CIM- UK இன் இலங்கைக்கிளையின் பணிப்பாளர் சபை அங்கத்தவர் என்பதுடன், இலங்கையின் பட்டய சந்தைப்படுத்தல் கல்வியகத்தின் கூட்டாண்மை தொடர்பாடல்கள் மற்றும் வலையமைப்பின் தலைமை அதிகாரியாகவும் திகழ்கிறார். சான்றளிக்கப்பட்ட முகாமைத்துவக் கணக்கியலாளர்கள் அவுஸ்திரேலியாவின் இலங்கைக் கிளையில் 2012ஆம் ஆண்டு இவர் சம்மேளன அங்கத்தவராகத் திகழ்ந்தார்.

சந்தைப்படுத்தல் மற்றும் வர்த்தக நாமங்கள் தொடர்பான CMO ஆசியா விருதுகள் என்பது முன்னணி சந்தைப்படுத்தல் நிபுணர்கள், வர்த்தக நாம காப்பாளர்கள், விளம்பர மற்றும் புத்தாக்க சிந்தனை நபர்களை ஒரே கூரையின் கீழ் கொணரும் உயர் செயலமர்வாக அமைந்துள்ளது. துறையில் காணப்படும் சிறந்த நிபுணர்களை இனங்கண்டு அவர்களை கௌரவிக்கும் வகையில் அமைந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .